6து கொண்டை ஊசி வளைவில் சரிந்து விழுந்து கிடந்த மரம்

76பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம்


*ஏலகிரி மலை 6வது கொண்டை ஊசி வளைவில் சரிந்து விழுந்து கிடந்த மரம்! சிறிது நேரம் போராடி அப்புறப்படுத்திய தீயணைப்பு துறையினர்*


திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது இங்கு தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலிருந்தும் தினந்தோறும் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நிலையில் தற்பொழுது கோடை வெப்பம் துவங்கி உள்ளதால் ஏலகிரி மலைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.


இந்த நிலையில் நேற்று இரவு ஏலகிரி மலை ஆறாவது கொண்டை ஊசி வளைவில் மரம் ஒன்று சரிந்து விழுந்துள்ளது.

இந்த நிலையில் அவ்வழியாக பயணித்த சுற்றுலா பயணி ஒருவர் சரிந்து விழுந்த மரம் குறித்து திருப்பத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்

பின்னர் நிலைய அலுவலர் முருகன் தலைமையில் தீயணைப்பு துறை வீரர்கள் கேசவன், கணபதி, வைகுந்தன் வாசன், ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று சரிந்து விழுந்து கிடந்த மரத்தை இரவு நேரம் என்றும் பாராமல் மிகவும் சிரமத்துடன் சிறிது நேரம் போராடி அப்புறப்படுத்தினர்.

மேலும் இரவு நேரம் என்பதால் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி