ஜோலார்பேட்டையில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட 10 பேர் கைது

60பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி பகுதி மற்றும் ஜே. என். ஆர் நகர் ஆகிய பகுதிகளில் பாலியல் தொழில் நடைபெற்று வருவதாக திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது ஜெகநாதன் மற்றும் போலிசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டார்.
அப்போது மண்டலவாடி பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து கேத்தாண்டப்பட்டி பகுதியை சேர்ந்த ராஜா மனைவி சங்கரி (35) என்பவரும், ஜங்களாபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜா மகன் விவேக் (26) என்பவரும் புரோக்கர்களாக தமிழக மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்து பெண்களை வரவழைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி பணம் சம்பாதித்து வந்தது தெரிய வந்தது.

அதேபோல் ஜே. என். ஆர் நகர் பகுதியில் நிம்மியம்பட்டு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் ராவ் மனைவி நதியாபாய் (36) என்பவரும், வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த கண்ணதாசன் மகன் கார்த்திக் (33) என்பவரும் புரோக்கர்களாக செயல்பட்டு தனி வீடு எடுத்து அதில் பாலியல் தொழில் செய்து வந்துள்ளனர்.
2 இடங்களிலும் பாலியல் தொழிலில் பெண்களை ஈடு படுத்திய 4 புரோக்கர்கள் மற்றும் அங்கு வாடிக்கையாளர்களாக வந்த ஞானசெல்வம், சந்துரு, ராஜா, ராஜுவ், விக்னேஷ், ஜெயந்த், என 6 பேர் மொத்தம் 10 பேரை கைது செய்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி