தவெக-வின் அரசியல் எதிரி திமுக என்று கட்சி மாநாட்டில் விஜய் மறைமுகமாக கூறியிருந்தார். அவர் எதிர்க்கட்சி அதிமுகவை விமர்சிக்காத நிலையில் அக்கட்சியுடன் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைக்கலாம் என்ற கருத்து பரவலாக இருக்கிறது. இந்நிலையில் 2026 தேர்தலில் தவெக-வுக்கு 60 எம்.எல்.ஏ. சீட்டுகள் மற்றும் துணை முதல்வர் பதவியை அதிமுக தலைமையிடம் விஜய் கேட்டுள்ளதாக மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் கூறியுள்ளார்.