ஆற்காடு கடைகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை

52பார்த்தது
ஆற்காடு கடைகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை
ஆற்காடு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பள்ளிக்கூடங்களின் அருகில் உள்ள கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து நகராட்சி ஆணையாளர் வேங்கட லட்சுமணன் தலைமையில் துப்புரவு அலுவலர் பாஸ்கர் உள்ளிட்ட அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது கலவை சாலை, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள பெட்டிக்கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பீடி, சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களைப் பறிமுதல் செய்தனர். மேலும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தனர்.

தொடர்புடைய செய்தி