சம்பா பருவத்திற்கு தேவையான விதைகள் நுண்ணூட்ட கலவைகள் உயிர் உரங்கள் உள்ளிட்ட இடுபொருட்கள் திமிரி வட் டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. திமிரி வட்டாரத்தில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயிகள் தங்களுக்கு தேவையான வேளாண் இடு பொருட்களை ஏ. டி. எம். கார்டு, கூகுள் பே, போன் உள்ளிட்ட பணம் இல்லா மின்னணு பரிவர்த்தனை மூலம் அரசு கணக் கில் செலுத்தி இடுபொருட்கள் பெறுவதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கான கருவி திமிரி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் வழங்கப்பட்டுள்ளது. எனவே வேளாண்மை விரிவாக்க மையம் மூலம் இடுபொருட்களை வாங்க வரும் விவசாயிகள் இடுபொருட்களுக்கான முழு தொகை அல்லது பங்க ளிப்பு தொகையை மின்னணு பரிவர்த்தனை மூலமாக செலுத்தி வேளாண் இடுபொருட்களை பெற்று பயனடையலாம் என வேளாண்மை உதவி இயக்குனர் ராமன் தெரிவித்துள்ளார்.