குடியாத்தம்: காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்!

52பார்த்தது
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பேரணாம்பட்டு பிஎஸ்என்எல் அலுவலகம் எதிரில் வேலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காங்கிரஸ் கட்சியின் வருமான வரி கணக்கை காலதாமதமாக தாக்கல் செய்ததற்காக காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளை முடக்கி 210 கோடி ரூபாய் அபராதம் விதித்த பாஜக மத்திய அரசையும் மத்திய வருமானவரித்துறையை கண்டித்தும் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வேலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி