கணித பாடம் புரியல.. மாணவன் தற்கொலை

81பார்த்தது
கணித பாடம் புரியல.. மாணவன் தற்கொலை
குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள முத்தலக்குறிச்சி அம்பலத்தடிவிளை பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மற்றும் ராஜிவ், அஜய் (19) என்ற இரண்டு மகன்கள் தனியாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் அஜய் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணையில், கல்லூரியில் கணினி அறிவியல் படித்துவரும் அஜய்க்கு கணித பாடம் புரியவில்லை எனவும், படிக்கவே விருப்பம் இல்லை எனவும் புலம்பியதாக அவரது சித்தி கூறியுள்ளார். இதனால் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என போலீசார் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி