ராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) பயிற்சியாளர் சேர்க்கைக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்க ஜூன் 13ம் தேதி வரை காலக்கெடு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இணையதளத்தில் பதிவு செய்ய வசதி இல்லாத மாணவர்கள் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ராணிப்பேட்டை, அரக்கோணம் ஐடிஐ அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள சேர்க்கை உதவி மையங்களை அணுகி விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் வளர்மதி தெரிவித்துள்ளார்.