கட்டிட ஒப்பந்ததாரரிடம் ரூ. 1¾ லட்சம் மோசடி!

55பார்த்தது
கே. வி. குப்பம் பகுதியை சேர்ந்த 40 வயது நபர் கட்டிட ஒப்பந்ததாரராக உள்ளார். இவர் பிரபல தனியார் சிமெண்டு நிறுவனத்தின் டீலர்ஷிப் பெறுவதற்காக இணையதளத்தில் தனது செல்போன் எண் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து வைத்துள்ளார்.

இதைப்பார்த்த மர்ம நபர்கள் தனியார் சிமெண்டு நிறுவனத்தின் மும்பை தலைமையகத்தில் இருந்து அதிகாரி பேசுவதாக அந்த நபரை தொடர்பு கொண்டுள்ளார். தொடர்ந்து அவர்கள் டீலர்ஷிப் வழங்குவதற்காக அந்த வாலிபரின் ஆதார், வங்கிக்கணக்கு புத்தகம், புகைப்படம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பெற்றுள்ளனர். தொடர்ந்து போலியான பதிவு சான்றிதழை அனுப்பி வைத்து அதை பூர்த்தி செய்து அனுப்புமாறும் தெரிவித்துள்ளனர்.

இதை நம்பிய அவர் அந்த ஆவணத்தை பூர்த்தி செய்து அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். பின்னர் அந்த மர்மநபர்கள் பதிவு கட்டணம் மற்றும் தடையில்லா சான்றிதழ் பெறுவதற்காக பணம் அனுப்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

அதன்பேரில் அவர் ரூ. 1 லட்சத்து 87 ஆயிரத்து 500 அனுப்பி வைத்துள்ளார். மேலும் உரிமம் தொடர்பான ஒப்பந்தம் பெறுவதற்காக ரூ. 2 லட்சத்து 25 ஆயிரம் செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த அந்த வாலிபர் விசாரணை செய்துள்ளார். அப்போது தன்னை ஏமாற்றியது மர்ம நபர்கள் என்பது அவருக்கு தெரியவந்தது. இதுகுறித்து புகாரின் பேரில் வேலூர் சைபர் கிரைம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் புனிதா விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்தி