ஒடுகத்தூர்: கிணற்றில் தவறி விழுந்த கன்று மீட்பு!

81பார்த்தது
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த கீரைக்குட்டை கிராமத்தை சேர்ந்தவர் முனிசாமி இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு சொந்தமாக அப்பகுதியில் விவசாய நிலம் உள்ளது. அதேபோல், சொந்தமாக மாடுகளை பராமரித்து வருகிறார்.
இந்நிலையில், வழக்கம்போல் பசுவையும் கன்றுவையும் நிலத்தில் மேய்சலுக்காக விட்டு இருந்தார்.

அப்போது, அருகே இருந்த சுமார் 100 அடி ஆழம் கொண்ட கிணற்றில் கன்று தவறி விழுந்தது. பின்னர், பசு கத்தும் சத்தம் கேட்ட முனிசாமி கிணற்று அருகே சென்று பார்த்த போது கன்று தண்ணீரில் தத்தளித்து கொண்டு இருந்தது.


உடனே இதுகுறித்து ஒடுகத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் சசிதரன் (பொறுப்பு) தலைமையிலான வீரர்கள் போராடி கன்றுவை உயிருடன் மீட்டு அதன் தாய் பசுவிடம் ஒப்படைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி