வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அல்லேரி கிராமத்தை சேர்ந்தவர் திருமலை (வயது 28). இவரை சாராயம் விற்ற வழக்கில் விரிஞ்சிபுரம் போலீசார் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.
இதேபோன்று சாராயம் விற்றதாக அல்லேரி கிராமத்தை சேர்ந்த தேவன் என்ற சுரேசை (28) வேப்பங்குப்பம் போலீசாரும், அணைக்கட்டு அருகே உள்ள வாழப்பந்தல் கிராமத்தை சேர்ந்த ராமுவை (19) அணைக்கட்டு போலீசாரும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
3 பேரும் சாராய விற்பனையில் தொடர்ந்து ஈடுபட்டதால் குண்டர் சட்டத்தில் கைது செய்யும்படி வேலூர் மாவட்ட எஸ்பி மணிவண்ணன், கலெக்டர் சுப்புலெட்சுமிக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் 3 பேரையும் குண்டர் சட் டத்தில் கைது செய்வதற்கு கலெக்டர் உத்தரவிட்டார்.