கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே தந்தை ஒருவர், தனது இரண்டு குழந்தைகளுடன் ஸ்கூட்டரில் நின்றிருந்தார். அப்போது, சிறுவன் வேகமாக வாகனத்தில் இருந்து இறங்கி, சாலையின் குறுக்கே ஓடினான். இதனை சற்றும் எதிர்பார்க்காத தந்தை, சிறுவனை பிடிப்பதற்குள் நடுரோட்டில் சென்ற லாரி சட்டென வந்தது. அந்த நொடியில் சிறுவன் திரும்பியதால், வாகனம் சிறுவன் மீது மோதாமல் சென்றது. நொடிபொழுதில் சிறுவன் உயிர் தப்பிய சம்பவம் குறித்த சிசிடிவி காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.