சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தில் கால் ஒன்று அடித்துச் செல்லப்பட்டது. காரில் இருந்தவரை, கார் கண்ணாடியை உடைத்துக்கொண்டு போலீசார் மீட்டனர். மதுரவாயல் எம்ஜிஆர் பல்கலைக்கழகம் அருகே உள்ள அடையாளம் பட்டு கூவம் தரைப்பாலம் நீரில் மூழ்கியது. வெள்ள நீர் கரைபுரண்டோடும் தரைப்பாலம் மீது காரில் சென்ற போது, ஒருவர் சிக்கிக் கொண்டார். உடனடியாக அங்கு சென்ற போலீசார், காரில் இருந்தவரை பத்திரமாக மீட்டனர். இதுகுறித்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.