அணைக்கட்டு: மாடுவிடும் விழாவில் 150 காளைகள் பங்கேற்பு!

576பார்த்தது
அணைக்கட்டு: மாடுவிடும் விழாவில் 150 காளைகள் பங்கேற்பு!
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூரை அடுத்த சென்றாயன்கொட்டாய் கிராமத்தில் சித்தேரி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாடுவிடும் விழா நடைபெற்றது. ஊர் நாட்டாண்மை ரங்கசாமி, பாலாஜி, ஓங்கப்பாடி ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் ஆகியோர் விழாவை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து 150-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பார்வையாளர்கள் கலந்துகொண்டனர். காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டு சீறிப்பாய்ந்து ஓடின.

அப்போது வீதியில் இருந்த இளைஞர்களை முட்டியதில் 15-க்கும் மேற் பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். குறைந்த நேரத்தில் இலக்கை அடைந்த காளைகளுக்கு முதல் பரிசு ரூ. 76 ஆயிரம், 2- வது பரிசு ரூ. 60 ஆயிரம், 3-வது பரிசு ரூ. 45 ஆயிரம் என மொத்தம் 76 பரிசுகள் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி