வெட்டுவானம் எல்லையம்மன் கோவிலில் மிளகாய் யாகம்!

60பார்த்தது
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த வெட்டுவானம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு எல்லையம்மன் திருக்கோவில் இத் திருக்கோயிலுக்கு வேலூர் மாவட்டத்தில் மட்டுமன்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருகை நிறைந்த திருக்கோவிலாகும். இத்திருக்கோவில் ஒவ்வொருமாதமும் அமாவாசை அன்று சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.

இதனை தொடர்ந்து ஆனிமாத அமாவாசை என்பதால் திருக் கோவிலில் உலக நன்மை வேண்டி பிரத்தியங்கரா நிகும்பலா மிளாகாய் சிறப்பு யாகம் நடைபெற்றது. இதில் 108 ஹோமப் பொருட்களும், 108 கிலோ மிளகாய், 18 லிட்டர் இலுப்பை எண்ணெயும் பட்டுப் புடவையும் யாகத்திற்காக உபயோகப்படுத்தப்பட்டது.

யாகசாலை பூஜைகள் நிறைவற்றவுடன் தீப ஆராதனைகள் காட்டப்பட்டது. இதனை தொடர்ந்து அம்மனை ஊர்வலமாக கொண்டு வந்து ஊஞ்சல் சேவை உற்சவம் நடைபெற்றது. அப்போது திரளான பெண்களுக்கு அருள் வந்து ஆடினர்.

மேலும் திருக்கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து நீண்ட வரிசையில் காத்திருந்தும், பெண்கள் நெய் தீபங்கள் ஏற்றியும் அம்மனை வழிபட்டனர். இந்த சிறப்பு யாகத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகைத்தந்து அம்மனை வழிபட்டு சென்றனர்.

தொடர்புடைய செய்தி