நெற்பயிர்கள் மழையில் நாசம் அடைந்ததால் விவசாயி பேட்டி

72பார்த்தது
வேலூர் மாவட்டம்

*காட்பாடி அடுத்த எருக்கம்பட்டு கிராமத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த 20 ஏக்கர் நெற்பயிர்கள் மழையில் நாசம்*

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பொன்னை எருக்கம்பட்டு கிராமத்தில் வசித்து வருபவர் விவசாயி தர்மலிங்கம் இவர் மோகன் என்பவரின் 20 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து பயிரிட்டு வந்தார்

இந்த நிலையில் தற்பொழுது குத்தகைக்கு எடுத்து 4 லட்சம் ரூபாய் செலவு செய்து அந்த 20 ஏக்கர் நிலத்தில் நெற்பயரிகளை பயிரிட்டு அறுவடைக்கு தயாராக இருந்து உள்ளது

இந்த சூழ்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக வேலூர் மாவட்டத்தில் பெய்த கனமழை கொட்டி தீர்த்தது இதன் காரணமாக நெற்பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி நாசமாகியுள்ளது

இதனையடுத்து விவசாயி தருமலிங்கம் கூறுகையில் தான் ரூபாய் 4 லட்சம் கடன் 20 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து பயிரிட்டு வந்ததாகவும் எந்த நிலையில் அறுவடைக்கு தயாராக இருந்த தனது நெற்பயிர்கள் அனைத்தும் தற்பொழுது நீரில் மூழ்கி நாசமாகியுள்ளதால் மாவட்ட நிர்வாகம் நிவாரணம் வழங்கி உதவிடுமாறு கோரிக்கை வைத்தார்

தொடர் மழை காரணமாக நேற்று வரை வேலூர் மாவட்டத்தில் ஏழு வட்டங்களில் 151 விவசாயிகளின் 109 ஹெக்டர் விவசாய நிலத்தில் பயிர்கள் சேதம் அடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

பேட்டி: தர்மலிங்கம் (விவசாயி)

தொடர்புடைய செய்தி