காட்பாடியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

65பார்த்தது
காட்பாடி பகுதியில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பிரம்மபுரம் பகுதியில் காட்பாடி போலீசார் பிரம்மபுரம் ஏரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அந்த பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த ஜெகதீஷ் என்பவரை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனை அடுத்து அவரிடம் தொடர்ந்து செய்த விசாரணையில் அவர் கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தது. எனவே போலீசார் அவரை கைது செய்தனர் அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி