மதநல்லிணக்கனம் தொடர்பாக திமுக அரசின் சாயம் வெளுக்கிறது என தவெக காட்டமாக விமர்சித்துள்ளது. இதுகுறித்து தவெகவின் கொள்கைப் பரப்புச் செயலாளர் ராஜ்மோகன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "மதநல்லிணக்கப் பேரணிக்கு திமுக அரசு அனுமதி மறுத்திருக்கிறது. மதச்சார்பின்மை என்று கபடநாடகம் ஆடும் திமுக அரசால் பாஜக மீதானத் தன்னுடைய மறைமுகப் பாசத்தை வெளிப்படுத்தாமல் இருக்க இயலவில்லை. பூனைக்குட்டி வெளியே வரத்தான் செய்கிறது" என்று தெரிவித்துள்ளார்.