எலான் மஸ்க்கிற்குச் சொந்தமான சமூக ஊடக தளமான எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) இன்று உலக அளவில் சிறிது நேரம் முடங்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால், பயனர்கள் எக்ஸ் தளத்தின் முக்கிய அம்சங்களைப் பயன்படுத்த முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 3 மணிக்குப் பின்னர் எக்ஸ் தளம் முடங்கியதாக பயனர்கள் பலரும் தெரிவித்தனர். எனினும், எக்ஸ் தளம் தரப்பில் இதுவரை எந்த ஒரு கருத்தும் இது தொடர்பாக தெரிவிக்கப்படவில்லை.