சாலை விழிப்புணர் மற்றும் தாய்ப்பால் விழிப்புணர் ஊர்வலம்

62பார்த்தது
வாணியம்பாடியில் சாலை விழிப்புணர்வு மற்றும் தாய்பால் ஊட்டுவது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்.

வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்று இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக தலைகவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் செயல்பட்டு வரும் டேவிட் குமார் மருத்துவமனை சார்பில் சாலை பாதுகாப்பு மற்றும் தாய்பால் ஊட்டுவது குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மருத்துவர் டேவிட் விமல் தலைமை வகித்தார். மருத்துவர் நிட்டி ரோஸ் அனைவரையும் வரவேற்றார்.

இதில் சிறப்பு அழைப்பாளராக வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் குமார் கலந்து கொண்டு பேருந்து நிலையத்தில் ஊர்வலத்தை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து பேருந்து நிலையம் வழியாக இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகளை நிறுத்தி தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களுக்கு இலவசமாக தலைக்கவசங்களை வழங்கினர்.

நிகழ்ச்சியில் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அஜிதா பேகம், அரசு மருத்துவர்கள் டாக்டர் பார்த்திபன், டாக்டர் செந்தில், காவல் துறையினர் மற்றும் மருத்துவ மனை செவிலியர்கள், மாணவிகள், ஊழியர்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்று விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தொடர்புடைய செய்தி