வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை வழங்கும் நோக்கில் தொடங்கப்பட்டது தான் பிரதம மந்திரியின் இன்டர்ன்ஷிப் திட்டம். இந்த திட்டத்தில் சேருவதற்கு கால அவகாசம் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னணி தனியார் நிறுவனங்களில் இளைஞர்களுக்கு மாதம் ரூ.5,000 சம்பளத்துடன் இன்டர்ன்ஷிப் வழங்கப்படும். ஒரு முறை ஊக்கத்தொகையாக ரூ.6,000 வழங்கப்படும். இந்த திட்டத்தில் இணைவதற்கு https://pminternship.mca.gov.in/login/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.