நாம் உணவுகளில் சேர்க்கப்படும் சில பொருட்கள்தான், உணவுக்கு அதீத சுவையை தருகிறது. இவற்றில் மிக முக்கிய பங்கு வகிப்பது உப்பு. இந்நிலையில், உணவில் அதிக உப்பை உட்கொள்வது இரைப்பை புற்றுநோயை ஏற்படுத்தும் என்று இங்கிலாந்து நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அந்த ஆய்வில், சுமார் 4,71,144 பேரிடம் உப்பு அதிகமாக சேர்க்கப்பட்டதன் விளைவுகள் குறித்து கண்டறியப்பட்டது. இந்த ஆய்வில் உப்பினாலும், பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வதால் இரைப்பை புற்றுநோய் ஏற்படுத்தும் என தெரிய வந்துள்ளது.