திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் கடந்த ஓரு மணி நேரமாக இடி, மின்னல், காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள், பொது மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இன்று(அக்.23) காலை முதல் மதியம் வரை வெயில் சுட்டெரித்த நிலையில் மாலை 4 மணி முதல் கனமழை பெய்து வருகிறது.