விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து நீரில் கரைக்கப்பட்டது

64பார்த்தது
விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து நீரில் கரைக்கப்பட்டது
ஆம்பூரில் விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலம் கோலாகலமாக ஆட்டம் பாட்டதுடன் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகர பகுதிகளில் இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்புகளின் சார்பாக திலகர் திடல் உட்பட 25க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு விநாயகர் சதுர்த்தி விழா 3 நாட்கள் பஜனைகள், பள்ளி மாணவவர்களுக்கான திறன் மேம்பாட்டு போட்டிகள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் உடன் நடைபெற்றது.

4 வது நாளான நேற்று (செப்.10) ஆம்பூர் கஸ்பா பகுதியில் இருந்து ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலத்தை இந்து முன்னணி அமைப்பின் வேலூர் கோட்ட செயலாளர் தீனதயாளன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

ஊர்வலத்தில் மாடாட்டம், மையிலாட்டதுடன் ஆட்டம் பாட்டத்துடன் இளைஞர்கள் உற்சாகமாக ஊர்வலமாக கொண்டு சென்று விநாயகர் சிலைகள் ஆம்பூர் பஜார், பைபாஸ் சாலை வழியாக ரெட்டி தோப்பு பகுதியில் உள்ள ஆணைமடகு நீர் தேக்கத்தில் பாதுகாப்பான முறையில் கிரென் மூலம் கறைக்கப்பட்டது.

ஊர்வலத்தில் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா தலைமையில் 250க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி