இலவச மருத்துவ முகாம்: வில்வநாதன் எம். எல். ஏ. தொடங்கி வைப்பு

59பார்த்தது
இலவச மருத்துவ முகாம்: வில்வநாதன் எம். எல். ஏ. தொடங்கி வைப்பு
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த மாதனூர் பகுதியில் மோதி சிக்கன் குழுமத்தின் அதிநவீன வசதிகளுடன் சாய் சுமதி மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனை மற்றும் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக ஆம்பூர் தொகுதி வில்வநாதன் எம். எல். ஏ. கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதில் மாதனூர் ஒன்றியக்குழு தலைவர் சுரேஷ்குமார், மாதனூர் மத்திய ஒன்றிய தி. மு. க. பொறுப்பாளர் சீனிவாசன், மாதனூர் ஊராட்சி மன்ற தலைவர் குமார், ஒன்றியக்குழு உறுப்பினர் கார்த்திக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி