காட்பாடியில் தீப்பற்றி எரிந்த மின் மீட்டர் பெட்டி

55பார்த்தது
காட்பாடியில் தீப்பற்றி எரிந்த மின் மீட்டர் பெட்டி
காட்பாடி திருவள்ளுவர் நகரில் உள்ள சின்டெக்ஸ் குடிநீர் தொட்டியின் மின் மீட்டர் மற்றும் மோட்டார் இணைப்பு பெட்டியில் நேற்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் காட்பாடி மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த மின்வாரிய ஊழியர்கள் மின்இணைப்பை துண்டித்து, தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி