குடியாத்தத்தில் 13 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில்

64பார்த்தது
குடியாத்தம் கொண்டசமுத்திரம் ஊராட்சி பாண்டியன் நகர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி தம்பதிக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். மகள் வயது 13 தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
குடியாத்தம் ஆசிரியர் காலனி ராமலிங்க நகர் முதல் தெருவை சேர்ந்த கரிகாலன் என்பவருடைய மகன் வினோத் வயது 20 என்பவர் இந்த மாணவியை காதலிப்பதாக கூறி கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்த மாணவியின் தந்தை விபத்தில் காயமடைந்ததால் அந்த மாணவியின் தந்தை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். உடன் அவரது தாயும் இருந்ததால் அந்த சிறுமியை பாட்டி வீட்டில் இருக்க சொல்லிய போது அந்த சிறுமி வீட்டிலேயே இருப்பதாகவும் பாட்டி வீட்டிற்கு செல்லவில்லை என கூறியுள்ளார். இதனை தொடர்ந்து தனியாக இருந்த அந்த மாணவி வீட்டுக்கு சென்ற வினோத் ஐந்து தினங்களாக தொடர்ந்து இரவு நேரங்களில் மாணவியின் வீட்டுக்கு சென்று பாலியில் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய அந்த மாணவியின் பெற்றோருக்கு அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர். அதே நேரத்தில் அவர்களது உறவினர்கள் காவல்துறையின் குழந்தைகள் உதவி மையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அந்த மையத்தினர் குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு அனுப்பினர்.

தொடர்புடைய செய்தி