தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சுற்றுலா வேன் ஒன்று எதிரே வந்த கார் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இரண்டு வாகனங்களும் சுக்குநூறாக நொறுங்கி நிலையில், வேணில் இருந்த 18 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். போலீசார் விசாரணையில், கேரளாவில் இருந்து ஏற்காடு சுற்றுலா சென்ற வேனும், காரும் மோதி விபத்துக்குள்ளானது தெரியவந்துள்ளது.