நடிகரும், தேமுதிக தலைவருமான மறைந்த ’கேப்டன்’ விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று (டிச. 28) அனுசரிக்கப்படுகிறது. இதன் காரணமாக, சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் இன்று சிறப்பு பூஜை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்நிலையில், சீமான் முதல் ஆளாக கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்தின் நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்தியுள்ளார்.