தேமுதிக தலைவர் மறைந்த விஜயகாந்த்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று (டிச.,28) அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து சென்னை கோயம்பேடு தேர்தல் ஆணையத்தில் இருந்து விஜயகாந்த் நினைவிடத்திற்கு பேரணியாக செல்ல தேமுதிக திட்டமிட்டு இருந்தது. ஆனால், பேரணிக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. இதனால், போலீசாரின் தடையை மீறி தேமுதிகவினர் விஜயகாந்த் நினைவு தினப் பேரணியை தொடங்கி உள்ளனர்.