தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில், இன்றும் (டிச.10) காலை 9:30 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பேசிய மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “மின்வாரியத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப நிதித்துறையின் அனுமதியை கோரி உள்ளோம். அந்த அனுமதி கிடைக்கும் பட்சத்தில், தேவைக்கேற்ப காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்” என உறுதியளித்துள்ளார்.