நவம்பர் 2014 விசாகப்பட்டினத்திலிருந்து தொழிலதிபர் ஒருவர் உ.பி, பஸ்திக்கு ரூ.14 லட்சம் மதிப்பிலான உரங்களை சரக்கு ரயில் மூலம் முன்பதிவு செய்தார். 42 மணி நேரத்தில் சென்றடைய வேண்டிய ரயில் பல நாட்கள் ஆகியும் வந்து சேரவில்லை. இதுகுறித்து தொழிலதிபர் புகாரளித்ததை தொடர்ந்து ரயில் காணாமல் போனது தெரியவந்தது. பல கட்ட விசாரணைக்குப் பிறகு 3.8 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூலை 2018 ரயில் பஸ்திக்கு வந்து சேர்ந்தது. ரயில் தாமதமானதற்கு தெளிவான விளக்கங்கள் ஏதுமில்லை.