சில மருந்துகள் ஆண்களுக்கு விறைப்புத்தன்மை பிரச்சனையை ஏற்படுத்துகின்றன. உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும் மருந்துகள், மன அழுத்தத்திற்கு எடுக்கப்படும் மருந்துகள், ஆஸ்பிரின், இப்யூபுரூஃபன் போன்ற வலி நிவாரணிகள், படை, பூச்சி கடிக்கு எடுக்கப்படும் சில அலர்ஜி எதிர்ப்பு மருந்துகள் ஆண்களுக்கு விறைப்பு தன்மை பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். எனவே மருத்துவரின் ஆலோசனையின்றி இது போன்ற நோய்களுக்கு சுயமாக மருந்துகள் எடுத்தல் கூடாது.