பல் துலக்கும் பிரஸ்கள், குளிக்கும் ஷவர்களில் புதிய வகை வைரஸ் இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ்களால் மனிதர்களுக்கு ஆபத்து இல்லை என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். "பாக்டீரியோபேஜ்" எனப்படும் இந்த வைரஸ்கள், தொழுநோய், காசநோய் போன்ற நோய்களை ஏற்படுத்தும் மைக்ரோ பாக்டீரியாவை தாக்கும் வகையிலானவை. இந்த வைரஸ்கள் ஒரு நாள் பாக்டீரியா தொற்றுகளுக்கான சிகிச்சையாக பயன்படுத்தப்படும் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.