சதுரகிரி மலையில் சுந்தர மகாலிங்கம் தவிர ஈசன் 5 வகையான லிங்கமாக காட்சி தருகிறார். இதில் ஒரு லிங்கம் பக்தர்கள் தரிசிக்க முடியாத அளவில் அடர்ந்த வனப்பகுதியில் உள்ளது. இதற்கு பெரிய மகாலிங்கம் என்று பெயர். இயற்கையாக அமைந்த பெரிய பாறையே லிங்கம் போல காட்சி தருவதால் இதற்கு இந்த பெயர் வந்தது. 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை இங்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அனுமதி மறுக்கப்படுகிறது.