மத்திய பாஜக அரசில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் கிரிராஜ் சிங்கை மனு கொடுக்க வந்தவர்கள் சூழ்ந்ததால் பைக்கில் ஏறி தப்பிச் சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. பீகாரில் அவரது சொந்தத் தொகுதியான பெகுசாராய் தொகுதியில் பூங்கா ஒன்றின் அடிக்கல் நாட்டு விழாவுக்காக வந்துகொண்டிருந்த கிரிராஜ் சிங்கின் காரை அங்கன்வாடி பணியாளர்கள் வழிமறித்துள்ளனர். தங்களின் மனுக்களை அவரிடம் கொடுக்க நெருக்கியடித்த நிலையில், காரில் இருந்து இறங்கி, பைக் ஒன்றின் பின்னால் அமர்ந்து அங்கிருந்து கிரிராஜ் சிங் தப்பியுள்ளார்.