“சில நாட்களாக எடப்பாடி பழனிசாமி வாக்கு சதவீத கணக்கு ஒன்றை சொல்கிறார். அது ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதி குமாரசாமி போட்ட கணக்கையே மிஞ்சும் அளவுக்கு உள்ளது. அதிமுக தொண்டர்களுக்கு கூட்டல் வகுத்தல் கணக்கே தெரியாது என நம்பி பொய்க் கணக்கை அவர் அவிழ்த்து விட்டுருக்கிறார். அவர் சொன்ன கணக்கை அடிப்படை அறிவுள்ள அதிமுகவினரே நம்ப மாட்டார்கள்" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.