துணை முதல்வர் குறித்த கேள்விக்கு உதயநிதி பதில்

67255பார்த்தது
துணை முதல்வர் குறித்த கேள்விக்கு உதயநிதி பதில்
துணை முதல்வர் குறித்த கேள்விக்கு அமைச்சர் உதயநிதி பதில் அளித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், விரைவில் நீங்கள் துணை முதல்வர் ஆகப்போவதாக தகவல் வருகிறதே என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு உதயநிதி, ஆமா.. ஆமா.. அனைத்து அமைச்சர்களும் முதலமைச்சருக்கு துணையாக இருப்போம் என பதிலளித்துவிட்டுச் சென்றார். முதல்வர் ஸ்டாலினின் வெளிநாட்டு பயணத்திற்கு முன் உதயநிதி துணை முதல்வராக நியமிக்கப்படுவார் என தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்தி