வௌவால் மலத்தை கஞ்சா செடிக்கு உரமாக பயன்படுத்திய இருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நோய்த் தொற்றுதான் மரணத்துக்குக் காரணம். அமெரிக்காவின் நியூயார்க்கில் 59 மற்றும் 64 வயதுடைய இரண்டு பேர் இறந்தனர். இருவரையும் ஹிஸ்டோபிளாஸ்மோசிஸ் என்ற அரிய நோய் தாக்கியுள்ளது. அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக வீட்டில் சிலர் கஞ்சா செடிகளை வளர்த்து வருகின்றனர். இந்த விவகாரத்தை அரசு தீவிரமாக எடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.