5 மொழிகளில் திரிணாமுல் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

69பார்த்தது
5 மொழிகளில் திரிணாமுல் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை
நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை இன்னும் ஓரிரு நாட்களில் நேபாளி உட்பட 5 மொழிகளில் வெளியிட உள்ளது. மேற்கு வங்கத்தில் ஆட்சியில் இருக்கும் திரிணாமுல் தனது தேர்தல் அறிக்கையை பெங்காலி, ஹிந்தி, உருது, ஆங்கிலம் மற்றும் சந்தாலி மொழியான ஒல்சிகி ஆகிய மொழிகளில் வெளியிடவுள்ளது. மறுபுறம், மேற்கு வங்கத்தில் முர்ஷிதாபாத் டிஐஜியை பதவி நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. வன்முறைச் சம்பவங்களைத் தடுப்பதற்கு அவர் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி