ஈரான் முதல் முறையாக இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானின் இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஹமாஸ் ஆயுதக் குழுவினருக்கு எதிராக இஸ்ரேல் போர் செய்யும் நிலையில் ஈரான் தாக்குதலுக்கு கொஞ்சம் தாமதப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தொடர்ந்து இஸ்ரேல் மீது ஈரான் தீவிர தாக்குதல் நடத்தும் என எச்சரிக்கை விடுத்து வருகிறது.