சினிமாவை நீங்க தான் குத்தகைக்கு எடுத்திருக்கீங்களா? - விஷால்

77பார்த்தது
ஹரி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியாகவுள்ள படம் ‘ரத்னம்’. இந்த படத்தின் டிரைலர் நேற்று (ஏப்ரல் 15) வெளியானது. மேலும், இந்த படம் வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் விஷால் கொடுத்த பேட்டியில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தை விமர்சித்து பேசியுள்ளார். அதில், “ஒரு படத்தை தள்ளி ரிலீஸ் செய்ய சொல்ல யாருக்கும் அதிகாரம் கிடையாது. சினிமாவை நீங்க தான் குத்தகைக்கு எடுத்திருக்கீங்களா?. என்னுடைய படத்தை வேறு தேதியில் ரிலீஸ் செய்ய சொல்ல நீ யார்?” என ஆவேசமாக பேசியுள்ளார்.

நன்றி: கலாட்டா

தொடர்புடைய செய்தி