முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி காலமானார்!

45752பார்த்தது
முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி காலமானார்!
முன்னாள் அமைச்சரும், திமுக இலக்கிய அணி தலைவருமான புலவர் இந்திரகுமாரி நேற்றிரவு காலமானார். சிறுநீரக பாதிப்பு காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 1991 முதல் 1996ம் ஆண்டு வரை ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சராக பணியாற்றிய இவர், ‘தொட்டில் குழந்தை திட்டம்’ உருவாக முக்கிய காரணமாக விளங்கினார். அதிமுகவிலிருந்து விலகி 2006ல் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அவரது இறுதிச் சடங்குகள் இன்று அடையாறு இல்லத்தில் நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்தி