மகாராஷ்டிரா: புனேயில் ஜி.பி.எஸ். நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது. தற்போது 40 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இறப்புக்கான காரணத்தை கண்டறிய அவரது உடலுக்கு உடற்கூராய்வு செய்யப்பட்டது. இதில் அவர் ஜி.பி.எஸ். நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது. இதற்கிடையே புனேயில் சுமார் 111 பேர் ஜி.பி.எஸ். தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சுகாதாரமற்ற தண்ணீரால் ஜி.பி.எஸ். பாதிப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது.