தங்கம் விலை வரலாறு காணாத வகையில், ரூ.60,000-ஐ கடந்துள்ள நிலையில், இன்று (ஜன., 28) சற்று குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.7,510-க்கும், சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.60,080க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மாற்றம் இன்றி ஒரு கிராம் ரூ.104-க்கும், ஒரு கிலோ ரூ.1,04,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக தங்கம் விலை உயர்வுப் பாதையில் உள்ளது.