அம்பேத்கர் சிலைக்கு இபிஎஸ் மாலை அணிவித்து மரியாதை

69பார்த்தது
அம்பேத்கர் சிலைக்கு இபிஎஸ் மாலை அணிவித்து மரியாதை
அம்பேத்கரின் 134 வது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சேலத்தில் அம்பேத்கரின் உருவ சிலைக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கூட்டத்தில் அம்பேத்கரின் கொள்கை கோட்பாடு குறித்த கோஷங்கள் எழுப்பப்பட்டதோடு தீண்டாமைக்கு எதிரான உறுதி மொழியும் ஏற்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி