வந்தே பாரத்தின் முட்டை கிரேவியில் இறந்த கரப்பான் பூச்சி

50பார்த்தது
வந்தே பாரத்தின் முட்டை கிரேவியில் இறந்த கரப்பான் பூச்சி
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் டெலிவரி செய்யப்பட்ட முட்டை கிரேவியில் இறந்த கரப்பான் பூச்சி கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரத்தில் இருந்து நேற்றைய தினம் புறப்பட்ட வந்தே பாரத் ரயிலில் பயணித்த நடிகர் முரளி மேனன் வாங்கிய உணவில் இறந்த கரப்பான் பூச்சி கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த முரளி, இது பற்றி வந்தே பாரத் கேட்டரிங் பிரிவுக்கு புகார் அளித்தார். நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் அளிக்க இருப்பதாக கூறி சமூக வலைதளங்களில் இது தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.