கேரளாவின் பாலக்காடு பட்டாம்பி அருகே இளம்பெண்ணை கத்தியால் குத்தி அவரது நண்பர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். பிரவியா என்ற இளம்பெண்ணை, ஆலூரைச் சேர்ந்த நண்பர் சந்தோஷ்குமார் இன்று காலை கொடூரமாக கொலை செய்தார். தனியார் மருத்துவமனை ஊழியரான பிரவியா, வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது வழிமறித்து இரு சக்கர வாகனத்தை எட்டி உதைத்து பிரவியாவை கத்தியால் குத்தினார். பின்னர் அவரது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். உடனே அங்கிருந்து தப்பிய சந்தோஷ், அவரது சகோதரரின் வீட்டிற்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பிரவியாவின் திருமண நிச்சயதார்த்தம் இம்மாதம் 21ஆம் தேதி நடக்க இருந்தது. காதலில் இருந்து பின்வாங்கி, பழகுவதை நிறுத்தியதே கொலைக்கு காரணம் என போலீசார் முடிவு செய்தனர். இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.