பாஜக தேர்தல் அறிக்கை: திமுக கடும் விமர்சனம்

69பார்த்தது
பாஜக தேர்தல் அறிக்கை: திமுக கடும் விமர்சனம்
மக்களவை தேர்தலை முன்னிட்டு பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. பொது சிவில் சட்டம் அமல், ஒரே நாடு, ஒரே தேர்தல் உள்ளிட்ட அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. இது குறித்து திமுகவின் செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன், “வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்தியாவின் பெருமையை சிதைக்க பாஜக முயல்கிறது. அக்கட்சியை ஏற்காத மாநிலங்களில் கூட அதன் கொள்கையை திணிப்பது தான் ஒரே நாடு ஒரே தேர்தல். தமிழகத்தில் வாக்குகளை பெற எதை வேண்டுமானாலும் கூறுவது தான் அவர்களின் கொள்கை” என்றார்.

தொடர்புடைய செய்தி