உலக இதய தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. தற்போதைய காலத்தில் பலருக்கும் வயது வித்தியாசம் இல்லாமல் இதய நோய்கள் வருகிறது. இதயத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது பற்றியும், இதய நோய் பற்றிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தவும் இந்த தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான கருப்பொருள் “இதயம் சார்ந்து செயல்படுங்கள்” என்பதாகும். இதய ஆரோக்கியத்திற்கான பொறுப்பை மக்கள் உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதே இதன் பொருள்.